சிவகங்கை:சிங்கம்புணரி அருகே ஒடுவன்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 1 முதல் 5ம் வகுப்பு வரை சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். ஒடுவன்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 17 வருடங்களாக டேனியல் என்ற ஆசிரியரும், கீதாராணி என்ற ஆசிரியையும் மாணவர்களுக்குத் தரமான கல்வியை வழங்கி வந்ததாகத் தெரிகிறது.
இந்நிலையில், ஒடுவன்பட்டி தொடக்கப்பள்ளிக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தலைமையாசிரியராகத் திருமதி. உமா மகேஸ்வரி பணியில் சேர்ந்துள்ளார். பணிக்கு வந்த நாளிலிருந்து அங்கே பணியாற்றி வரும் ஆசிரியர் டேனியல் மற்றும் ஆசிரியை கீதா ராணி ஆகிய இருவரையும் தொடர்புப்படுத்தி தலைமையாசிரியர் உமா மகேஸ்வரி கூறியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் ஆசிரியர் டேனியலை தற்காலிகமாக வேறு ஒரு பள்ளிக்கு பணியிடை மாற்றம் செய்யப்பட்டார். பெற்றோர்கள் தலைமையாசிரியரை அணுகச் செல்லும்போது நைட்டியுடன் சென்றால் தலைமையாசிரியர் தரக்குறைவாகப் பேசுவதோடு மட்டுமல்லாமல் அவர்களை ஆசிரியர் டேனியல் உடன் தொடர்புப்படுத்திப் பேசுவதாகவும் பெற்றோர்கள் தலைமையாசிரியை மீது குற்றம் சாட்டுகின்றனர்.