தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பள்ளி வேனின் சக்கரத்தில் சிக்கி யூகேஜி சிறுவன் பலி! - private school

சிவகங்கை: பள்ளி வேனில் இருந்து இறங்கி சென்ற யூகேஜி சிறுவன் பின்பக்க சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

யூகேஜி சிறுவன் பலி

By

Published : Mar 27, 2019, 5:18 PM IST

சிவகங்கை மாவட்டம், மாங்குடி அருகே கோடாங்கிபட்டியை சேர்ந்த சுந்தரராஜன், உமா ஆகியோரது மகன் கோகுல் பிரசாத் (4). சிவகங்கை அருகே வாணியங்குடியில் செயல்பட்டு வரும் வீரகாளியம்மன் நர்சரி பள்ளியில் யூகேஜி படித்து வந்தார். நேற்று பள்ளி முடிந்ததும் பள்ளியந் வாகனத்தில்வந்த அந்த சிறுவன் தன் வீட்டிற்கு அருகில் இறங்கியுள்ளார்.

அப்போது யாரும் எதிர்பாராத நிலையில், சிறுவன் இறங்கி செல்வதை கவனிக்காமல் பள்ளி வாகன ஓட்டுநர் வேனை பின்பக்கமாக இயக்கி உள்ளார். இதில் வேனின் பின் சக்கரத்தில் சிக்கி சிறுவன் கோகுல்பிரசாத் பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து மானாமதுரை சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பள்ளி நிர்வாகத்திடமும் மாவட்ட கல்வி அதிகாரி மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details