சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் திமுகவின் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் கார்த்தி சிதம்பரம் மற்றும் மானாமதுரை (தனி) சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் இலக்கியதாசன் ஆகியோரை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், "கலைஞர் இல்லாத நிலையில் நான் இங்கு வாக்கு கேட்டு வந்துள்ளேன். இந்தியாவின் மானத்தை காப்பது உங்கள் கடமை. கார்த்தி சிதம்பரம் வாரிசின் அடிப்படையில் போட்டியிடவில்லை. தகுதியின் அடிப்படையில் நிறுத்தப்பட்டுளளார். தமிழ் சமுதாயத்தின் நிம்மதியை கெடுப்பது, கலவரத்தை உண்டாக்குவதுதான் ஹெச்.ராஜாவின் நோக்கம். ஹெச்.ராஜா நாடாளுமன்றம் போனால் நாடாளுமன்றத்தின் புனிதம் கெட்டு விடும். தந்தை பெரியாரை, அறிஞர் அண்ணாவை கொச்சைப்படுத்தி பேசும் ஹெச்.ராஜாவிற்கு இத்தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும்.