சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே சொர்ணகாளீஸ்வரர் கோயிலில் வைகாசி விசாக பெருவிழாவை ஒட்டி வடமாடு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் போட்டியில் பங்கேற்றனர்.
சிவகங்கையில் மஞ்சுவிரட்டு போட்டி: 15 வீரர்கள் படுகாயம்!
சிவகங்கை: காளையார்கோவில் அருகே சொர்ணகாளீஸ்வரர் கோயிலில் விசாக பெருவிழாவை ஒட்டி நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில், 15-க்கும் மேற்பட்ட வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.
போட்டியில் காளைகள் முட்டியதில் 15-க்கும் மேற்பட்டவர்கள் பலத்த காயமடைந்ததால் சிகிச்சைகாக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மேலும் போட்டியில் அடங்க மறுத்த காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளைகளை அடக்கிய காளையர்களுக்கும், குத்துவிளக்கு, கேடயம், ரொக்கப்பரிசு உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டன.
இந்த மஞ்சுவிரட்டைக் காண சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர். அதில் குறிப்பாக பெண்கள், சிறுவர்கள் அதிக அளவில் வந்து நிகழ்ச்சியை கண்டுகளித்தனர்.