தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வங்கியில் ரூ.6 கோடி மோசடி; வங்கி முன்னாள் மேலாளர்கள் உட்பட 3 பேர் கைது! - இந்தியன் ஓவர்சீஸ் வங்கி

சிவகங்கை: திருப்பத்தூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் மகளிர் குழுக்களுக்கு கடன் வழங்கியதில் ரூ.6 கோடி மோசடி செய்ததாக வங்கி முன்னாள் மேலாளர்கள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

I0B வங்கி

By

Published : Jul 4, 2019, 10:49 PM IST

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் தேசிய மயமாக்கபட்ட வங்கி (இந்தியன் ஒவர்சீஸ்வங்கி) உள்ளது. இந்த வங்கியில் கடந்த 2010ஆம் ஆண்டு முதல் 2012 வரையுள்ள காலத்தில் முதன்மை மேலாளர்களாக பிரேம்குமார், நேரு ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். அப்போது அவர்கள் திருப்பத்தூரில் செயல்பட்ட அன்னம் தொண்டு நிறுவனத்தின் செயலாளர் தமிழ்செல்வி(45) என்பவருடன் சேர்ந்து விதிமுறைகளை மீறி 288 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.6 கோடியே 14 லட்சத்து 46 ஆயிரம் கடனாக வழங்கியதாக கூறப்படுகிறது.

இந்த கடன்கள் திரும்ப வசூல் ஆகாததால் வங்கியில் அதிரடியாக ஆய்வு நடத்தினார்கள். இதில் 288 மகளிர் குழுக்களுக்கும் விதிமுறைகளை மீறி கடன் வழங்கியதும் வழங்கப்பட்ட ஆவணங்கள் போலியாக தயாரித்து ஏமாற்றியது தெரிய வந்தது. இது குறித்து காரைக்குடி மண்டல மேலாளர் லெசையா சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் ரோஹித் நாதனிடம் புகார் செய்தார்.

I0B வங்கி

இதனையடுத்து, மாவட்ட குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் அருள் மொழிவர்மன் தலைமையில் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தி தமிழ்செல்வி (45), பிரேம்குமார்(64), நேரு (58) ஆகிய மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மூவரிடமும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details