தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருமணம் செய்வதாக கூறி சிறுமி பலாத்காரம் - போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது - பாலியல்

சிவகங்கை: திருமணம் செய்வதாக கூறி 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து அனைத்து மகளிர் காவல் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

che

By

Published : Mar 15, 2019, 11:19 PM IST


சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே நங்கம்பட்டியை சேர்ந்த சிறுமியை, பள்ளத்தூரை சேர்ந்த சிவா(எ) பழனியப்பன் அடிக்கடி பள்ளத்தூர் சந்தையில் சந்தித்துள்ளார். இதில் சிறுமிக்கும், பழனியப்பனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதன் பின்பு சந்தர்ப்பத்தை பயன்படுத்தி திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பல தடவை சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதனால் கர்ப்பமடைந்த சிறுமி காய்ச்சல் என நினைத்து மருத்துவரிடம் சென்றுள்ளார். மருத்துவ பரிசோதனையில் சிறுமி கர்ப்பமானதை அறிந்த தாய் காரைக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் சிவா(எ)பழனியப்பனை காரைக்குடி மகளிர் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.


ABOUT THE AUTHOR

...view details