தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'சட்டப்பேரவையில் 5 நிமிடம்கூட இல்லாத ஸ்டாலின்'- சரத்குமார் விமர்சனம் - sarath kumar sivagangai campaign

சிவகங்கை: ஸ்டாலின் மக்கள் பிரச்னைகளை பேசாமல் சட்டப்பேரவைக்கு சென்ற ஐந்து நிமிடங்களிலேயே வந்துவிடுகிறார் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் விமர்சனம் செய்துள்ளார்.

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்

By

Published : Apr 12, 2019, 7:17 AM IST

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் நாகராஜன் மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜாவை ஆதரித்து சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் மானாமதுரையில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில்,

”ஏற்கனவே இங்கு இருந்த சட்டப்பேரவை உறுப்பினர் உங்களிடம் அனுமதி பெற்று வேறு இயக்கத்திற்கு சென்றிருக்க வேண்டும். உங்களை கேட்காமல் ஒரு மறுதேர்தல் நடைபெறும் சூழல் உருவாகி உள்ளது.

ப.சிதம்பரம் ரகசியம் என்னவென்று எனக்கு புரியவில்லை, ஏற்கனவே பல வழக்குகளை சந்தித்து பாஸ்போர்ட் முடக்கப்பட்டு மீண்டும் பெறப்பட்டு எத்தனை வழக்குகள் உள்ளன என்று அவருக்கு தெரியாத சூழலில் எப்படி சேவை செய்ய முடியும்?

இது ஒரு சந்தர்ப்பவாத கூட்டணியென்று ஸ்டாலின் சொல்கிறார். ஸ்டாலின் வாக்காளர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற சட்டப்பேரவைக்கு போகிறாரா? சட்டப்பேரவைக்குள் சென்ற ஐந்து நிமிடங்களிலேயே வெளியே வந்துவிடுகிறார்” என்றார்.

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்

ABOUT THE AUTHOR

...view details