சிவகங்கை: காரைக்குடியைச் சேர்ந்த மகேந்திரராஜா என்பவரது மகன் கார்த்தீபன். சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது உறவினரைப் பார்ப்பதற்காக சிவகங்கை வந்த நிலையில் சாமியார்பட்டி விலக்கு அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது சிவகங்கையிலிருந்து மானாமதுரை நோக்கிச் சென்ற மீன்வண்டி அவர்மீது மோதி சாலை ஓரத்தில் கவிழ்ந்த நிலையில் இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் வாகனத்தில் விற்பனைக்காகக் கொண்டு செல்லப்பட்ட அரை டன் அளவிலான மீன் மற்றும் நண்டுகள் சாலையோரம் சிதறின.