சிவகங்கை மாவட்டம் வீழனேரியில் ஸ்ரீ அழகிய மெய்ய அய்யனார் கோயில் குடமுழுக்கை ஒட்டி மாட்டுவண்டிப் பந்தயம் நடைபெற்றது. இதில் சிவகங்கை, மதுரை மாவட்டத்தின் சுற்றுவட்டார ஊர்களில் இருந்து வந்த 33 மாடுகள் பங்கேற்றன.போட்டியானது வீழனேரியில் இருந்து இராமலிங்கபுரம், மதகுபட்டி வழியாக 10 கி.மீ. தூரம் வரை சென்று மீண்டும் வீழனேரியில் முடிவடைந்தது.
சிவகங்கையில் மாட்டுவண்டிப் பந்தயம் - ஏராளமானோர் கண்டுகளிப்பு!
சிவகங்கை: வீழனேரியில் ஸ்ரீ அழகிய மெய்ய அய்யனார் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நடைபெற்ற மாட்டுவண்டிப் பந்தயத்தில் சீறிப்பாய்ந்த 33 மாடுகளை ஏராளமானோர் உற்சாகமாக கண்டுகளித்தனர்.
மாட்டுவண்டி பந்தயம்
போட்டியில் சிறப்பு விருந்தினராக கதர் மற்றும் கிராம தொழில் வாரியத் துறை அமைச்சர் பாஸ்கரன், சிவகங்கை மக்களவை உறுப்பினர் செந்தில்நாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்தப் போட்டியில் முதல் 15 இடம் பிடித்து வெற்றிபெற்ற மாடுகளுக்கும், அதன் சாரதிகளுக்கும், அமைச்சர் பாஸ்கரன், செந்தில்நாதன் எம்.பி. ஆகியோர் ரொக்கம் உள்ளிட்டப் பரிசுகளை வழங்கினர்.