புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் ஒரு தரப்புப் பெண்களை இழிவாகப் பேசி வாட்ஸ்அப்பில் ஆடியோ வெளியாகியது. இதனால், அப்பகுதியில் பதற்றம் நிலவியது. இது குறித்து சிலர் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டது.
பொன்னமராவதி பிரச்னை: காரைக்குடியில் சாலை மறியல் - புதுக்கோட்டை
சிவகங்கை: புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் ஒரு தரப்புப் பெண்களை வாட்ஸ்அப்பில் இழிவாக பேசியவர்களைக் கண்டித்து, காரைக்குடியில் 200-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சாலை மறியல்
இந்நிலையில், இவ்விவகாரத்தைக் கண்டித்தும், இதில் தொடர்புடையவர்களை கைது செய்யக்கோரியும் காரைக்குடி அருகே 200-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பின்னர், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து கலைந்து செல்லவைத்தனர். இப்போராட்டத்தால், அப்பகுதியில் இயங்கும் கடைகள் அடைக்கப்பட்டு, சுமார் இரண்டு மணி நேரம் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.