சிவகங்கை:தேவகோட்டை புது தெருவைச் சேர்ந்தவர், உமர் பாரூக் (36). இவர் மணல் கடத்தல் விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டு, சிறைசென்று கடந்த 2 மாதங்களுக்கு முன்புதான் வெளியே வந்தார். இந்நிலையில் நேற்று (ஏப்ரல் 03) நள்ளிரவு தேவகோட்டை ஆற்றுப்பாலம் அருகே கத்தியால் குத்தப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், உமர் பாரூக்கின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் கொலையாளியைத் தேடி வந்தனர்.