சிவகங்கை:ஈசனூர் கிராமத்தைச் சேர்ந்தவர், ஏழை விவசாயி பாக்கியம் என்பவரின் மகன் லிங்கராஜா. சிறு வயதில், கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்டு இவர், முழுநேரமும் அதற்காக தண்ணை அர்பணித்து விளையாடி வந்தார். இந்நிலையில், சிறு வயதில் ஏற்பட்ட விபத்தில், இவருக்கு ஒரு கை முறிவு ஏற்பட்டது.
லிங்கராஜாக்கு கிரிக்கெட் விளையாட்டின் மீது இருந்த ஆர்வத்தினால், தொடர்ந்து தனது ஒற்றை கையால் கிரிக்கெட் பயிற்சி மேற்கொண்டு வந்தார். மேலும் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணிக்கு தேர்வு பெற்று சிறப்பாக ஐந்து ஆண்டுகள் பேட்டிங், பௌலிங் இந்த இரண்டிலும் சிறப்பாக விளையாடி வந்தார். இந்நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கான இந்திய கிரிக்கெட் அணிக்கு தற்போது தேர்வாகியுள்ளார்.
இந்திய அணியில் விளையாட சிவகங்கை லிங்கராஜாவுடன் மதுரையைச் சேர்ந்த ராஜேஷ், திருப்பூர் மணிவண்ணனும் தேர்வாகியுள்ளார்கள். லிங்கராஜா தற்போது தனது பயிற்சியை மதுரையில் மேற்கொண்டு வருகிறார். இந்திய திவ்யாங் கிரிக்கெட் அணிக்கும் பங்களாதேஷ் திவ்யாங் கிரிக்கெட் அணிக்கு இடையிலான மூன்று சர்வதேச T20 கிரிக்கெட் போட்டிகள் வரும் 20ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரையில் மூன்று நாட்கள் ராஞ்சி மெக்கான் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.
இதில் விளையாட சிவகங்கை லிங்க ராஜா தேர்வு செய்யப்பட்டு ஓப்பனிங் பேட்ஸ்மேன்னாக விளையாட உள்ளார். இந்த போட்டியினை தொடர்ந்து வாரணாசியில் 24ஆம் தேதி ஒரு சர்வதேச போட்டியில் 26 ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரையில் லக்னோவில் நடைபெற உள்ள முதல் மாற்றுத்திறனாளிகள் டெஸ்ட் போட்டியிலும் இவர் விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளார்.