சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளான சாஸ்திரி நகர், ராமசாமி நகர், மீனாட்சி நகர் ஆகிய பகுதிகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகக் கடந்த சில நாள்களாகத் தொடர் மழை பெய்து வருகிறது.
இதனால் வீடுகளைச் சுற்றி மழைநீர் தேங்கி விடுகின்றது. அது மட்டுமின்றி கழிவுநீர் செல்ல வழியில்லாததால் மழை நீருடன் கலக்கிறது. இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். மேலும், ஏதேனும் நோய்த்தொற்று ஏற்படும் என்ற அச்சத்திலும் உள்ளனர்.