தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சூதாட்டத்தில் ஈடுபட்ட 9 பேர் கைது - சொகுசு கார்கள் பறிமுதல் - etv bharat tamil

சிவகங்கை மாவட்டத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 9 பேரை கைது செய்யப்பட்டனர்.

Illegal gambling: 9 பேர் கைது; சொகுசு கார், சீட்டுக்கட்டு உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல்!
Illegal gambling: 9 பேர் கைது; சொகுசு கார், சீட்டுக்கட்டு உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல்!

By

Published : Jan 11, 2023, 12:02 PM IST

சிவகங்கை மாவட்டம் கண்டனி கிராமத்தில் செயல்பட்டுவரும் தனியார் கல்வி நிறுவனம் பின்புறமுள்ள தோட்ட பகுதியில் சட்ட விரோதமாக சீட்டாட்ட கிளப் நடைபெறுவதாக சிவகங்கை நகர் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து அப்பகுதியில் காவல்துறையினர் சோதனையிட்டனர். அப்போது சட்ட ரோதமாக சீட்டாடிய மதுரையை சேர்ந்த பிரேம்குமார், விஜய், செந்தில்குமார், கிருபாகரன், சாதிக்பாட்சா, ஜோதிமுத்து, சரவணன், அலெக்சாண்டர், பழனி ஆகிய 9 பேரை கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடமிருந்து 69,419 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டு அங்கு வந்தவர்கள் பயன்படுத்திய 3 சொகுசு கார்கள், கிளப்பிற்காக பயன்படுத்திய டேபிள், சேர், மற்றும் பிரியானி செய்வதற்கான பாத்திரம் உள்ளிட்ட ஏராளமான பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர்.

இதையும் படிங்க: ஜாமீனில் வெளிவந்த இளைஞர் வெட்டிக்கொலை: பின்னனி என்ன?

ABOUT THE AUTHOR

...view details