சிவகங்கை: சிங்கம்புணரியில் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "தமிழ்நாட்டில் மதுக்கடைகளை திறக்காவிட்டால் கள்ளச்சாராயம் ஆறாக ஓடும்.
மது அருந்தும் பழக்கம் இருக்கும் வரை மதுக்கடைகள் இல்லையென்றால் கள்ளச்சாராயம் பெருகும். முதலில் நாடு முழுவதும் பாஜக ஆளும் மாநிலங்களில் உள்ள மதுக்கடைகளை மூடச் சொல்லுங்கள்" என்று தெரிவித்தார்.
கரோனா தொற்று குறைவான 27 மாவட்டங்களில் இன்றுமுதல் அரசு அறிவித்த கூடுதல் தளர்வுகள் நடைமுறைக்கு வந்துள்ளன. அதன்படி, காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணிவரை டாஸ்மாக் கடைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு எதிர்கட்சித் தலைவராக மதுபானக்கடைகளை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய ஸ்டாலின் இப்போது அனுமதி அளித்தது ஏன் என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதையும் படிங்க:'எதிர்க்கட்சித் தலைவராக கேள்வி எழுப்பிய உங்கள் மனச்சான்றை உலுக்கவில்லையா?' - சீமான்