சிவகங்கை பேருந்து நிலையமானது மிகவும் பிரதானமான பேருந்து நிலையங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இப்பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு செல்ல தினமும் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் இப்பேருந்து நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.
பேருந்து நிலையத்தில், பெண்ணின் பர்ஸை திருடிய முதியவர்! - Purse
சிவகங்கை: பேருந்திற்காக காத்திருந்த பெண்ணின் பர்ஸை முதியவர் ஒருவர் திடிச் சென்றது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பேருந்து நிலையத்தில், பெண்ணின் பர்ஸை திருடிய முதியவர்!
இந்நிலையில், மதுரைக்கு செல்லும் பேருந்துகளை நிறுத்தும் பகுதியில் தனியாக அமர்ந்திருந்த பெண் பயணி ஒருவரிடம், அவர் பையில் வைத்திருந்த பர்ஸை முதியவர் ஒருவர் திருடிச் சென்றுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான காட்சி அங்கிருந்த கடை ஓன்றின் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. அந்த காட்சிகளை அடிப்படையாக வைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் அப்பகுதியில் தொடர்ந்து நடைபெற்றுவருவது பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Last Updated : Apr 25, 2019, 8:06 PM IST