தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேசிய அளவில் பெண்களுக்கான மின்னொளி கபாடி போட்டி - 10 மாநிலங்கள் பங்கேற்பு! - பெரிய கருப்பன்

தேசிய அளவில் பெண்களுக்கான மின்னொளி கபாடி போட்டியில் தமிழ்நாடு உள்பட 10 மாநிலங்களைச் சேர்ந்த 25க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன.

தேசிய அளவில் பெண்களுக்கான மின்னொளி கபாடி போட்டி - 10 மாநிலங்கள் பங்கேற்பு!
தேசிய அளவில் பெண்களுக்கான மின்னொளி கபாடி போட்டி - 10 மாநிலங்கள் பங்கேற்பு!

By

Published : May 28, 2022, 6:57 PM IST

சிவகங்கைமாவட்டத்தில் திமுக சார்பில் தேசிய அளவில் மாநிலங்களுக்கிடையே பெண்களுக்கான மின்னொளி கபாடி போட்டி நடைபெற்றுவருகிறது. இதில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, ஹரியானா, கேரளா உட்பட 10 மாநிலங்களை சேர்ந்த 25க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றுள்ளன.

நாக் - அவுட் முறையில் நடைபெறும் இந்தக் கபாடி போட்டி மூன்று நாள்கள் நடைபெறுகிறது. இதனை, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கிவைத்தார். இதில், முதல் பரிசாக இரண்டு லட்சம் ரூபாயும், இரண்டாம் பரிசாக ஒரு லட்சம் ரூபாயும் பரிசுத் தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய அளவில் பெண்களுக்கான மின்னொளி கபாடி போட்டி - 10 மாநிலங்கள் பங்கேற்பு!

இந்நிலையில், இன்று (மே 28) தொடங்கிய முதல் போட்டியில் ஹரியானா மாநில அணியும், தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் தெப்பம்பட்டி அணியும் மோதியது. இதில் ஹரியானா அணி, தமிழ்நாடு அணியை 45க்கு 13 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தியது. இதனைத் தொடர்ந்து போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இதையும் படிங்க:Chessable Masters Finals: 2ஆம் இடம் பிடித்த பிரக்ஞானந்தா - பரிசுத்தொகை எவ்வளவு?

ABOUT THE AUTHOR

...view details