தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மு.க.ஸ்டாலின் மீது ஆர்.பி.உதயகுமார் நம்பிக்கை - அமைச்சர் பெரியகருப்பன் - சிவகங்கை மாவட்ட செய்திகள்

மு.க.ஸ்டாலின் மீது நம்பிக்கை வைத்தே அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சாகும்வரை உண்ணாவிரதம் அறிவித்துள்தாக அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

'மு.க.ஸ்டாலின் மீது ஆர்.பி. உதயகுமார் நம்பிக்கை'
'மு.க.ஸ்டாலின் மீது ஆர்.பி. உதயகுமார் நம்பிக்கை'

By

Published : Oct 9, 2021, 8:31 PM IST

சிவகங்கை: மாவட்டத்தில் அமைச்சர் பெரியகருப்பன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, "முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆளும் கட்சி ஜனநாயக முறைப்படி தேர்தலை நடத்தாவிட்டால் சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பேன் என அறிவித்திருக்கிறார்.

அதற்கு காரணம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு ஜனநாயக முறைப்படியும் நேர்மையாகவும் தேர்தலை நடத்த முனைப்புக்காட்டி வரும் தைரியத்தால் அவர் அப்படி பேசியுள்ளார். அவருக்கு அத்தகைய சூழல் வராது.

'மு.க.ஸ்டாலின் மீது ஆர்.பி. உதயகுமார் நம்பிக்கை'

திமுக இந்த உள்ளாட்சித் தேர்தலில் 100 விழுக்காடு வெற்றி பெரும். மக்கள் மனதில் திமுக நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது" என்றார்.

இதையும் படிங்க:ஆர்யன் கானுக்கு பிணை மறுப்பு... தந்தைக்கு பறிபோன விளம்பர வாய்ப்பு...

ABOUT THE AUTHOR

...view details