சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அதிமுக கூட்டணியின் நாடாளுமன்றத் தேர்தல் அலுவலகம் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சிவகங்கையில் வெற்றி பெறவில்லை என்றால் எடப்பாடி முகத்தில் முழிக்க மாட்டேன் –அமைச்சர் பாஸ்கரன் சபதம்! - TN CM
சிவகங்கை: சிவகங்கை தொகுதியில் வெற்றி பெறவில்லை என்றால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முகத்தில் முழிக்கமாட்டேன் என்று சபதம் ஏற்றுள்ளதாக கதர் மற்றும் கிராம தொழில் வாரியத் துறை அமைச்சர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
இதில் பேசிய கதர் மற்றும் தொழில் வாரியத் துறை அமைச்சர் பாஸ்கரன், நானும் நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்நாதனும் முதலமைச்சரை சந்தித்தபோது, சிவகங்கை தொகுதி மற்றும் மானாமதுரை இடைத்தேர்தலில் வெற்றி பெறவில்லை என்றால் உள்ளங்கள் முகத்தில் முழிக்க மாட்டோம் என்று சபதம் ஏற்றுக் கொண்டோம் எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய பாஸ்கரன், "கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்ட வழக்கு நிலுவையில் உள்ள நிலையிலும் ராஜகண்ணப்பன் கட்சி மாறிவிட்டார். அம்மாவிற்கு செய்த துரோகம்தான் அவர் சட்டப்பேரவையிலும், நாடாளுமன்றத்திலும் வெற்றி பெற முடியவில்லை" என ஆவேசமாக தெரிவித்தார்.