சிவகங்கை:காரைக்குடி தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் முதியவர் பிச்சை. இவரது உறவினர்கள் அனைவரும் வெளிநாட்டில் வசித்து வருகின்றனர். முதியவர் மட்டும் தனியாக வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று (ஜுன் 24) மாலை அருகில் உள்ள கொப்புடையம்மன் கோயில் குளத்தில் அவர் குளிக்கச் சென்றார்.
அப்போது நிலைதடுமாறி குளத்திற்குள் விழுந்தவர் நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இன்று (ஜூன் 25) காலை குளத்தில் குளிக்கச் சென்றவர்கள் நீரில் அவரது சடலம் மிதப்பதைக் கண்டு காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.