இன்ஸ்டாவில் பெண்கள் புகைப்படங்களை மார்பிங் செய்து வெளியிட்ட நபர் கைது சிவகங்கை:காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்த சிலர் தங்களது சமூக வலைத்தளங்களிலிருந்து புகைப்படங்களை எடுத்து அதனை ஆபாசமாக மார்பிங் செய்து மிரட்டுவதாகப் புகார் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கூறுகையில், "இன்ஸ்டாகிராமில் இருந்து ஒரு சிலரின் புகைப்படங்களை எடுக்கப்பட்டு அதனை ஆபாசமாக மார்பிங் செய்து வாட்ஸ்-அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதோடு, குரூப்களிலும் பகிரப்பட்டுள்ளது. மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்கள் மூலம் பெண்களின் அலைபேசி எண்ணிற்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது" என்றார்
பாதிக்கப்பட்ட நபர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், மாவட்ட எஸ்பி செல்வராஜ், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் நமச்சிவாயம், சைபர் க்ரைம் ஆய்வாளர் தேவி கொண்ட குழு அமைத்து விசாரணை நடத்தினார். காவல்துறை நடத்திய தீவிர விசாரணையில், இந்த கொடூர சம்பவத்தைச் செய்தது ஈரோடு ஈ.வெ.ரா தெருவைச் சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் ரஞ்சித் (46) என்பது தெரியவந்தது.
பின்னர், அந்த நபரை கைது செய்த போலீசார் அவர் வெளியிட்ட புகைப்படங்களை சமூக வலைத்தளங்களிலிருந்து நீக்கியதோடு, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: 'டாணாக்காரன்' பட பாணியில் பழி தீர்க்கும் எஸ்.ஐ: பெண் காவலர் குமுறல்