சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை அடுத்துள்ள ராஜகம்பீரம் பகுதியைச் சேர்ந்தவர் ராணுவ வீரர் பாலமுருகன்.
இந்நிலையில், பாலமுருகன் இன்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மைதானத்தில் மழைநீர் சேகரிப்பை வலியுறுத்தியும், மரம் வளர்ப்பை வலியுறுத்தியும் உலக சாதனைக்காக 24 மணிநேரம் பின்னோக்கி 165 கிலோ மீட்டர் இலக்கு நிர்ணயித்து நடந்து செல்லும் சாதனை பயணத்தை தொடங்கினார்.