தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஊரடங்கு காரணமாக கீழடி அகழாய்வு தற்காலிகமாக நிறுத்திவைப்பு!

சிவகங்கை: இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளதால், கீழடியைச் சுற்றி நடைபெறும் ஆய்வுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக தொல்லியல் துறை அறிவித்துள்ளது.

கீழடி அகழாய்வு, கரோனா காரணமாக கீழடி அகழாய்வு நிறுத்தம்
ஊரடங்கு காரணமாக கீழடி அகழாய்வு தற்காலிகமாக நிறுத்திவைப்பு

By

Published : May 9, 2021, 6:37 AM IST

சிவகங்கை மாவட்டம் கீழடியில் தமிழ்நாடு தொல்லியல் துறையின் ஏழாம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. கீழடி மட்டுமன்றி கொந்தகை, அகரம், மணலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் ஒரே சமயத்தில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஏழாம் கட்டமாக நடைபெறும் அகழாய்வில் தற்போது வரை மண் கலயங்கள், பானைகள், முதுமக்கள் தாழிகள், தங்க ஆபரணம் ஆகியவை கண்டறியப்பட்டன. தொடர்ச்சியான கள ஆய்வுகள் நடைபெற்று வரும் நிலையில், கரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை தீவிரம் காரணமாக, தமிழ்நாடு அரசு நாளை (மே 10) முதல் மே 24ஆம் தேதி வரை‌ தமிழ்நாடு முழுவதும் பொது முடக்கத்தை அறிவித்துள்ளது.

இதன் காரணமாக, கீழடியில் நடைபெறும் அகழாய்வுப் பணிகளும் நிறுத்தி வைக்கப்படுவதாக தமிழ்நாடு தொல்லியல் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: 'மேற்கு வங்கத்தில் நடக்கும் வன்முறைகளுக்கு மம்தா பானர்ஜிதான் காரணம்' - ஹெச். ராஜா!

ABOUT THE AUTHOR

...view details