தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘தரமற்ற நிறுவனத்தின் கையில் பாதாள சாக்கடை அமைக்கும் திட்டம்’ - கார்த்தி சிதம்பரம் குற்றச்சாட்டு - underground sewer

சிவகங்கையில் பாதாள சாக்கடை அமைக்கும் திட்டம் தரமற்ற நிறுவனத்திடம் கொடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்த கார்த்திக் சிதம்பரம்
செய்தியாளர்களைச் சந்தித்த கார்த்திக் சிதம்பரம்

By

Published : Sep 27, 2021, 7:33 AM IST

சிவகங்கை:காரைக்குடியிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் காரைக்குடி பாதாள சாக்கடை திட்டம் குறித்து கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது, “பாதாள சாக்கடை அமைக்கும் திட்டப் பணிகள் தரமற்ற நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும், அதனை கண்டிப்பதாகவும் கூறினார். பாதாள சாக்கடைத் திட்ட டெண்டரை ரத்து செய்துவிட்டு முறையாக ஆய்வு செய்து தரமான நிறுவனத்திடம் ஒப்படைக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

செய்தியாளர்களை சந்தித்த கார்த்தி சிதம்பரம்

மேலும், அத்திட்டத்தினை விரைந்து முடிக்க முதலமைச்சருக்கு காரைக்குடி சட்டப்பேரவை உறுப்பினர் மூலம் கடிதம் அனுப்பப்பட உள்ளதாகவும் கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.

இதையும் படிங்க:தொடரும் காங்கிரஸ் உட்கட்சி பூசல் - கார்த்தி சிதம்பரம் முன்னிலையில் மோதல்

ABOUT THE AUTHOR

...view details