தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போலி நகை வைத்து 40 லட்சம் ரூபாய் மோசடி செய்தவர் கைது - நகை மதிப்பீட்டாளர்

சிவகங்கை: போலி நகைகளை வைத்து 40 லட்ச ரூபாயை மோசடி செய்ததாக வங்கி முதன்மை மேலாளர் கொடுத்த புகாரின் பேரில் நகை மதிப்பீட்டாளரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

File pic

By

Published : Jun 2, 2019, 2:28 PM IST

காரைக்குடியில் செயல்பட்டுவரும் தனியார் வங்கியில் கடந்த 1990ஆம் ஆண்டு முதல் ஒப்பந்த அடிப்படையில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்துவருபவர் ராமமூர்த்தி.

இந்நிலையில் ஏப்ரல் 13 ஆம் தேதி வங்கியில் அடகு வைக்கப்பட்ட நகைகளை வங்கி அலுவலர்கள் சோதனை செய்தனர். அப்போது ராமமூர்த்தி 2,000 கிராம் போலி நகைகளை 10 நபர்களின் பேரில் வைத்து சுமார் 40 லட்ச ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாகத் தெரியவந்தது.

நகை மதிப்பீட்டாளர் போலி நகை வைத்து பல லட்சம் மோசடி

இதனையடுத்து வங்கியின் முதன்மை மேலாளர் குறிஞ்சிநாதன் சிவகங்கையில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் புகார் கொடுத்தார்.

புகாரின் அடிப்படையில் ராமமூர்த்தியை விசாரித்த காவல் துறையினர் இந்த மோசடிக்கு துணையாக அவரது மகன் ரத்ன குமார் இருந்ததும் தெரியவந்தது. பின் காவல்துறையினர் ரத்ன குமார் மீதும் வழக்குப்பதிவு செய்ததுடன் ராமூர்த்தியையும் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ABOUT THE AUTHOR

...view details