தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மஞ்சுவிரட்டு போட்டியில் மாடு முட்டியதில் இருவர் காயம் - jallikattu

சிவகங்கை: பனங்குடியில் கோயில் திருவிழாவை ஒட்டி நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் மாடு முட்டி இரண்டு பேர் காயம் அடைந்தனர்.

மஞ்சு விரட்டில் இருவர் காயம்

By

Published : Apr 22, 2019, 11:56 PM IST

சிவகங்கை மாவட்டம் பனங்குடியில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் பொங்கல் திருவிழாவினை முன்னிட்டு, வடமாடு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 16 காளைகள், 144 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். ஒரு காளையை 25 நிமிடத்தில் அடக்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் ஒன்பது பேர் களமிறக்கப்பட்டனர். சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் போட்டியில் பங்கேற்றனர்.

போட்டியில் காளைகள் முட்டியதில் 2 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details