சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான ஐக்யூ டியூப் என்ற கல்விக்கான திறன்பேசி செயலி மற்றும் இளையோர் ஐ.ஏ.எஸ். பயிற்சியகம் துவக்க விழா நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கதர் மற்றும் கிராம தொழில்துறை அமைச்சர் பாஸ்கரன் மற்றும் மாலத்தீவு அரசின் கல்வி இலாகா அமைச்சர் அப்துல் ரஸீத் அஹ்மத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் மாலத்தீவு கல்வித் துறை அமைச்சர் பேசுகையில், உலக நாடுகளில் உள்ள அனைத்து துறைகளிலும் உயர்பதவிகளில் இந்தியர்களே அதிக அளவில் பணிபுரித்து வருகின்றனர். கூகுல் நிறுவனத்தின் சி.இ.ஓ. கூட இந்தியர்தான் என்றார். மேலும் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ கல்வி, திறமை நேர்மறை எண்ணங்கள் மிகவும் அவசியம். ஒழுக்கம் இல்லாத கல்வி பயனற்றது என்றார். இந்திய நாட்டின் கலாச்சாரம், ஒருவருக்கு ஒருவர் மரியாதை செலுத்தி மதித்து வாழ்வதும் எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.