தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடியுரிமை திருத்தச் சட்ட ஆதரவு நோட்டீஸ்கள் - பேருந்தில் விநியோகம் செய்த ஹெச்.ராஜா!

சிவகங்கை: குடியுரிமை திருத்தச் சட்ட ஆதரவு புத்தகங்கள், நோட்டீஸ்களை பேருந்து பயணிகளிடம் பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா விநியோகம் செய்தார்.

நோட்டீஸ்களை பேருந்தில் விநியோகம் செய்த எச்.ராஜா
நோட்டீஸ்களை பேருந்தில் விநியோகம் செய்த எச்.ராஜா

By

Published : Jan 22, 2020, 10:45 PM IST

சிவகங்கையில் இன்று நகர பேருந்து நிலையத்தில் பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச். ராஜா தலைமையில் பாஜகவினர் குடியுரிமை திருத்தச் சட்ட ஆதரவு புத்தகங்கள், நோட்டீஸ்களை விநியோகம் செய்து பரப்புரையும் மேற்கொண்டனர்.

மேலும், கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர்வரை இருசக்கர வாகனத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பரப்புரை ஊர்வலம் சிவகங்கைக்கு வந்தடைந்தது. அந்த ஊர்வலத்திற்கு வரவேற்பும் அளிக்கப்பட்டது.

அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த ராஜா கூறுகையில், “குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்து விளக்க புத்தகங்கள், நோட்டீஸ்கள் சிவகங்கை பேருந்து நிலையத்தில் உள்ள பொது மக்களுக்கும் பேருந்தில் பயணம் செய்பவர்களுக்கும் கொடுக்கப்பட்டன.

நோட்டீஸ்களை பேருந்தில் விநியோகம் செய்த எச்.ராஜா

அதிமுக - பாஜக கூட்டணி குறித்து முதலமைச்சர் தெளிவாக கூறியுள்ளார். ரஜினிக்கு யாரும் பாடம் எடுக்க வேண்டாம், ஆதாரங்கள் பலமாக உள்ளன” என்றார்.

இதையும் படிங்க: பெரியார் எதிர்ப்பு அரசியலில் ரஜினிகாந்த் ஈடுபடுகிறாரா? - பதில் அளிக்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்...

ABOUT THE AUTHOR

...view details