சிவகங்கை மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. கோடை வெயிலை சமாளிக்க முடியாமல் மக்கள் வீட்டிற்குள் முடங்கி இருந்தனர். மேலும் கண்மாய்கள் வறண்டு காணப்பட்டதால் குடிநீர் தட்டுப்பாடு நிலவிவருகிறது.
சிவகங்கையில் மழை: மக்கள் மகிழ்ச்சி! - people and farmers happy for the heavy rain
சிவகங்கை: மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று மதியம் சிவகங்கை மாவட்டம் முழுவதும் மேகங்கள் சூழ்ந்து இருந்ததால், குளிர்ச்சியான சீதோஷண நிலை நிலவியது. இதில் காரைக்குடி, மானகரி, தளக்காவூர், கல்லல் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது. இதனால் வாகன ஓட்டிகள் மழையில் நனைந்தபடி சென்றனர். ஆங்காங்கே மழை நீர் வெள்ளம் போல் சாலையில் ஓடியது.
மேலும் இந்த மழையால் கால்நடைகளுக்கு தேவையான குடிதண்ணீர் குளங்களில் சிறிதளவு சேர்ந்தது. இதனால் மக்கள் மற்றும் விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சியடைந்தனர்.