சிவகங்கை நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரியில் நாளை நடைபெற உள்ளது. இதனையொட்டி, மாவட்ட கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் தலைமையில் 1500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வாக்கு எண்ணும் மையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு! - sivagangai
சிவகங்கை: நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறவுள்ள நிலையில், சிவகங்கை தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காரைக்குடி நகருக்குள் மூன்று சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, வாகனங்கள் பலத்த சோதனைக்கு பின்னரே நகருக்குள் அனுமதிக்கப்படுகின்றன. வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு செல்லும் அரசு அதிகாரிகள் பலத்த சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். மாவட்ட ஆட்சியர், தேர்தல் பார்வையாளர்கள் , செய்தியாளர்களை தவிர, மாவட்ட கண்காணிப்பாளர்கள் உட்பட மற்ற யாரும் செல்போன் பயன்படுத்த கூடாது என்று மாவட்ட கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் அறிவுறுத்துள்ளார்.
மேலும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்திற்கு 500 மீட்டருக்கு முன்பு தடுப்பு வேலி அமைக்கப்பட்டு, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அசம்பாவிதங்களை தடுக்கும் விதமாக, ஆங்காங்கே காவல் ஆய்வாளர்கள் தலைமையில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அமைதியான வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் எடுக்கப்பட்டு, தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.