தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தோல்வி பயத்தில் ப.சிதம்பரம்? - ex financial minister

சிவகங்கை: காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தேர்தல் கருத்துக் கணிப்புகள் குறித்த கேள்விக்கு பதிலளிக்க மறுத்துள்ளார்.

ப.சிதம்பரம்

By

Published : May 20, 2019, 5:53 PM IST

17ஆவது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏழு கட்டங்களாக நடத்து முடிந்தது. இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுடன் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் ஆலோசனை நடத்தினார்.

ப.சிதம்பரம்

இந்தக் கூட்டத்தில், வாக்கு எண்ணிக்கையின் போது, வாக்கு எண்ணிக்கை மையத்தில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ப.சிதம்பரம் ஆலோசனை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. பின்னர் ப.சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது நேற்று ஊடகங்களில் வெளிவந்த தேர்தல் கருத்துக் கணிப்புகள் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் கருத்து கூற மறுத்துவிட்டார். நேற்று வெளியான கருத்துக்கணிப்பில் பாஜக 306 இடங்களை பிடிக்கும் என தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details