தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எங்களுக்கும் நாக்கு இருக்கிறது - ஸ்டாலினுக்கு எடப்பாடியார் எச்சரிக்கை! - இபிஸ்

சிவகங்கை: எங்களுக்கும் நாக்கு இருப்பதால், ஸ்டாலின் அவதூறாக பேசினால் அதற்கு பதில் தர நாங்கள் தயாராகிவிட்டோம் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆவேசமாக பேசினார்.

'ஸ்டாலின் ஒரு வைரஸ்' - எடப்பாடியார்

By

Published : Apr 2, 2019, 8:46 AM IST

Updated : Apr 2, 2019, 9:04 AM IST

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜாவை ஆதரித்து சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:

எந்த காலத்திலும் திமுகவுடன் கூட்டணி வைக்கமாட்டேன் என்று வைகோ கூறினார். ஆனால் இன்று மதிமுக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றது.

மேலும் என்னை மண்புழு என ஸ்டாலின் கூறுகின்றார். ஆனால் ஸ்டாலின் தான் வைரஸ் போல் உள்ளார். மண்புழு உரம் விவசாயத்திற்கு நல்லது. அது போல் நான் விவசாயிகளின் நண்பன் என்று தெரிவித்தார்.

ஸ்டாலின் யாரையும் மதித்து பேச வேண்டும். ஒரு கட்சியை விமர்சித்து பேச எல்லை உண்டு. எங்களுக்கும் நாக்கு உள்ளது. நீங்கள் அவதூறாக பேசினால், அதற்கு பதில் தர நாங்கள் தயாராகிவிட்டோம் என்று ஆவேசமாக கூறினார்.

ஸ்டாலின் கொள்ளைபுறமாக பதவிக்கு வந்தவர் என குற்றம்சாட்டிய அவர், மத்தியில் திறமையான ஆட்சி அமைய மோடி ஆட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என தெரிவித்தார்.

'ஸ்டாலின் ஒரு வைரஸ்' - எடப்பாடியார்
Last Updated : Apr 2, 2019, 9:04 AM IST

ABOUT THE AUTHOR

...view details