சிவகங்கை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பல்வேறு துறை சார்ந்த அலுவலகங்கள் இயங்கிவருகின்றன. இந்த அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் அலுவலகத்திற்குள்ளேயே அமர்ந்து மது அருந்துவதாக ஏற்கனவே பொதுமக்களிடம் இருந்து பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்நிலையில், ஆட்சியர் வளாகத்தில் செயல்பட்டுவரும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மண்டல மேலாளர் அலுவலக வளாகத்தில் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் சிலர் கையில் மது பாட்டில்களுடன் மது அருந்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.