தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேவகோட்டை அரசு பள்ளிக்கு-இஸ்ரோ தலைவர் பாராட்டு! - இஸ்ரோ தலைவர் பாராட்டு

சிவகங்கை: இஸ்ரோ அனுப்பும் அனைத்து செயற்கை கோள்களுக்கும் மாணவர்கள் மூலம் வாழ்த்துகளை தெரிவிக்கும் தேவகோட்டை அரசுப் பள்ளிக்கு இஸ்ரோ தலைவர் சிவன் பாராட்டு மடல் அனுப்பியுள்ளார்.

சிவகங்கை

By

Published : Aug 12, 2019, 6:39 PM IST

அந்த பாராட்டு மடலில்,

’தேவகோட்டை அரசுப் பள்ளி தலைவர் சொக்கலிங்கம் அவர்களுக்கு, பி.எஸ்.எல்.வி-சி 45 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்படதற்கு, வண்ணவண்ண பலூன்களை பறக்கவிட்டு உங்கள் மாணவர்கள் பாராட்டு தெரிவித்ததை அறியும்போது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.

விண்வெளித் துறையின் வளர்ச்சியை மாணவர்களுக்கு எடுத்துச் சொன்ன உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். உங்களின் முன் நோக்கு பார்வைக்கு என் வாழ்த்துகள். உங்களை போன்ற நல்லுள்ளங்களின் வாழ்த்துக்களால் இந்திய விண்வெளித் துறையில் மென்மேலும் வெற்றிபெறும்.

இஸ்ரோ தலைவர் பாராட்டு மடல்
மேலும் உங்களின் சேவைக்கும் உங்கள் பள்ளியின் வளர்ச்சிக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்’ என தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details