தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கல்வி கட்டண உயர்வு விவகாரம்: அண்ணா பல்கலை.க்கு முத்தரசன் வேண்டுகோள்! - mutharasan press meet

சிவகங்கை: கல்வி கட்டணத்தை உயர்த்துமாறு தமிழக அரசுக்கு அண்ணா பல்கலைக்கழகம் பரிந்துரை செய்திருப்பதை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என முத்தரசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முத்தரசன்

By

Published : Apr 26, 2019, 9:51 PM IST

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, “அண்ணா பல்கலைக்கழகம் கல்வி கட்டணத்தை உயர்த்த அரசுக்கு பரிந்துரைத்ததை திரும்ப பெற வேண்டும். மேலும், எந்த கல்வி நிறுவனங்களும் கல்வி கட்டணத்தை உயர்த்தக் கூடாது. இது மாணவர்களின் சேர்க்கையை பாதிக்கும்” என்றார்.

முத்தரசன் பேட்டி

அதேபோல், மதுரை தொகுதி வாக்கு எண்ணும் மைய பிரச்னையில் வட்டாச்சியர் தன்னிச்சையாக செயல்பட்டிருக்க முடியாது என்றும் அதற்கு பின்னணியில் உள்ள முக்கியஸ்தர்களையும் கண்டுபிடிக்க வேண்டும் எனவும் முத்தரசன் கூறினார்.

மேலும், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகளின் ஆர்ப்பாட்டத்தில் குறிப்பிட்ட ஒரு சமூகத்தினரை சுட வேண்டும் என்று நான் பேசியதாக முகநூலில் தவறானத் தகவலை சிலர் பரப்புகின்றனர் என்றும், இதனை தான் வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details