சிவகங்கை: காளையார் கோயில் பகுதியைச் சேர்ந்தவர் திவ்யா மோனிஷா. திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் லெனின். இருவரும் மருத்துவர்கள் ஆவர்.
இவர்கள் பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர். திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் இருவரும் பணிபுரிந்து வந்த நிலையில், நேற்று (ஆக.25) திருமணம் செய்துள்ளனர்.
காதல் ஜோடி தஞ்சம்
காதல் திருமணத்திற்கு திவ்யா மோனிஷாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து மதுரை தல்லாகுளம் மகளிர் காவல் நிலையத்தில் இருவரும் பாதுகாப்பு கோரி தஞ்சம் புகுந்தனர்.
இதனையடுத்து புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர், இருவரையும் பாதுகாப்பாக வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க:சாதி மறுப்பு திருமணம் - மிரட்டும் பெற்றோர் மீது புகார்