தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'மறைமுக பாஜக ஆதரவில் இருந்த ஓபிஎஸ்ஸின் சாயம் வெளுத்துவிட்டது' - போட்டுத்தாக்கிய கார்த்தி சிதம்பரம்! - agnipath issue

'ஓ.பன்னீர்செல்வம் காவி சால்வையை ஏற்றுக்கொண்டதன் மூலம், மறைமுக பாஜக ஆதரவில் இருந்த அவரின் சாயம் வெளுத்துவிட்டது' என அர்த்தம், என கார்த்தி சிதம்பரம் எம்.பி., கூறியுள்ளார்.

ஓபிஎஸின் பாஜக  சாயம் வெளுத்து விட்டது - எம்பி கார்த்தி சிதம்பரம்
ஓபிஎஸின் பாஜக சாயம் வெளுத்து விட்டது - எம்பி கார்த்தி சிதம்பரம்

By

Published : Jun 27, 2022, 6:31 PM IST

சிவகங்கை:காரைக்குடி ஐந்து விளக்கு அருகே அக்னிபத் திட்டத்திற்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் இன்று(ஜூன் 26) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது ஆண்டிபட்டியில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு வரவேற்பு கொடுத்த பாஜக தொண்டர் அவருக்கு காவி நிற சால்வை அணிவித்தார். ஓ.பன்னீர்செல்வம் அதனை ஏற்றுக்கொண்டது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த கார்த்தி சிதம்பரம், 'மறைமுக பாஜக ஆதரவில் இருந்த ஓ.பன்னீர்செல்வத்தின் சாயம் வெளுத்துவிட்டது’ எனத் தெரிவித்தார்.

கார்த்தி சிதம்பரம் எம்.பி. பேட்டி

பின்னர் தொடர்ந்து பேசிய அவர், 'சிறுபான்மையினரைத் தாக்கி மதக்கலவரங்களைத் தூண்டவே அக்னிபத் திட்டத்தை மோடி கொண்டு வந்துள்ளார். அக்னிபத் திட்டத்தின் மூலம் ராணுவத்தில் சேர்பவர்கள் நான்கு ஆண்டுகளில் வெளிவந்து விடுவர். பின்பு ராணுவத்திற்கும், மாணவர்களுக்கும் தொடர்பே இருக்காது. அந்த மாணவர்களை மதக் கலவரத்தில் ஈடுபடுத்த தான் மோடி திட்டமிட்டுள்ளார்’ என்றும் கூறினார்.

இதையும் படிங்க:துரிதகதியில் சென்னை வந்த ஓபிஎஸ்... அடுத்து என்ன செய்யப்போகிறார்?

ABOUT THE AUTHOR

...view details