ஒரு குறிப்பிட்ட சமூகம் குறித்து இழிவாகப் பேசி காணொளி ஒன்றை சமுகவலைதளத்தில் மர்ம நபர்கள் பதிவேற்றம் செய்தனர். இது வைரலாகி தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சர்ச்சை பேச்சு: நடவடிக்கை எடுக்கக்கோரி ஆட்சியரிடம் மனு
சிவகங்கை: தங்களது சமூக பெண்கள் குறித்து இழிவாக பேசி சமுக வலைதளத்தில் பதிவு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி குறிப்பிட்ட அந்த சமூக அமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
முத்திரையர் இன மக்கள் சிவகங்கை ஆட்சியரிடம் கோரிக்கை மனு!
இதையடுத்து அச்சமூகத்தை சேர்ந்தவர்கள் தங்கள் சமூக பெண்களை இழிவாக பேசியவர்களை கைது செய்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து தமிழ்நாடு முழுவதும் போராட்டதில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அச்சமூகத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர், இழிவாக பேசி இணையத்தில் பதிவேற்றம் செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தனர்.