சிவகங்கை மாவட்டம் காளையார்கோயிலில் மூன்று சிவாலயம் அமைந்த பிரசித்தி பெற்ற சொர்ணகாளீஸ்வரர் ஆலயத்தில் உள்ள சோமேஸ்வரர்- சவுந்தரநாயகி அம்மனுக்கு வைகாசி விசாக திருவிழா மே 9ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாரதனைகள், திருவீதி உலா ஆகியவைக்கு பக்தர்கள் வந்து அருள் பாலித்து சென்றனர்.
காளையார்கோயிலில் தேரோட்டம் - chariot festival
சிவகங்கை: காளையார்கோயில் சொர்ணகாளீஸ்வரர் ஆலயத்தில் வைகாசி விசாக தேரோட்டம் நேற்று நடைபெற்றது.
காளையார்கோயிலில் தேரோட்டம்
அம்மன் பெரிய தேரிலும், அம்பாள் சிறிய தேரிலும் எழுந்தருளினார்கள். பொதுமக்கள் வடம் பிடித்து இழுத்தனர். இந்நிகழ்வில் ஆயிரக்கணக்காணவர்கள் பங்கேற்றனர். சிவகங்கை தேவஸ்தானம், ஏ.எல்.ஏ.ஆர் அறக்கட்டளை, கிராம பொது மக்களும் ஆகியோர் விழாவுக்கான ஏற்பாடுகளை செய்தனர். ஆண்டுக்கு 3 முறை தை, வைகாசி, ஆடி ஆகிய மாதங்களில் தேரோட்டம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது