தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அமைச்சர் பங்கேற்ற விழாவில் அதிகாரிகளுடன் பயனாளிகள் வாக்குவாதம் - தொழிலாளர் நலத்துறை

சிவகங்கையில் அமைச்சர் பெரியகருப்பன் பங்கேற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பொருட்கள் வழங்காததால் அதிகாரிகளுடன் பயனாளிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதிகாரிகளுடன் பயனாளிகள் வாக்குவாதம்
அதிகாரிகளுடன் பயனாளிகள் வாக்குவாதம்

By

Published : May 31, 2022, 12:51 PM IST

சிவகங்கை:பேருந்து நிலையம் அருகே தனியார் மஹாலில் தொழிலாளர் நலத்துறை சார்பில் அடையாள அட்டை வழங்குதல் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக காரைக்குடி, திருப்பத்தூர், திருப்புவனம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் துறை சார்பில் அழைத்து வரப்பட்டனர்.

மாலை 4 மணி நிகழ்ச்சிக்கு காலை 9 மணிக்கே பயனாளிகள் அழைத்து வரப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மாலை 4 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கிய நிலையில் அமைச்சர் பெரியகருப்பன் ஒரு சில பயனாளிகளுக்கு மட்டும் நலத்திட்டத்தினை வழங்கினார்.

அதிகாரிகளுடன் பயனாளிகள் வாக்குவாதம்

அதன்பின் அங்கிருந்த அதிகாரிகள் முறையாக பொருட்களை வழங்க ஏற்பாடு செய்யாததால் கூட்டம் முண்டியடிக்கவே பயனாளிகள் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பொருட்கள் மற்றும் அட்டை வழங்குவதை அதிகாரிகள் நிறுத்தியதுடன் அலுவலகத்தில் வந்து பெற்றுக்கொள்ள அறிவுறுத்தினர்.

காலை முதல் காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றதால் அதிகாரிகளை பயனாளிகள் வசைபாடி சென்றனர்.

இதையும் படிங்க:திமுக அரசை அண்ணாமலை விரைவில் வாழ்த்துவார் - அமைச்சர் பெரியகருப்பன்

ABOUT THE AUTHOR

...view details