சிவகங்கை:கீழடியில் எட்டாம் கட்ட அகழாய்வுப் பணி, கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கீழடியில் 5 குழிகள் தொண்டப்பட்டு அகழாய்வுப் பணி நடைபெற்று வருகிறது. இதில் ஒரு குழியில் சுமார் 4அடி ஆழத்தில் தோண்டும்போது பெரிதும் சிறிதுமாக 3 இரும்புப் பொருட்கள் கிடைத்துள்ளன.
இதன் மூலம் நம் முன்னோர்கள் கி.மு 2600 ஆண்டுகளுக்கு முன்பு இரும்பு உருக்காலைகள் முலம் இரும்புப் பொருட்களை உருக்கி பல்வேறு பொருட்களாகப் பயன்படுத்தி இருப்பது தெரிய வருகிறது என்று தொல்லியல் துறை ஆராய்ச்சியாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது.