சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு பொறியியல் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இதில், 1990-1994 ஆண்டுகளில் பொறியியல் பயின்ற முன்னாள் மாணவர்கள், 25 வருடங்களுக்குப் பிறகு தங்களது குடும்பத்துடன் வந்து பங்கேற்றனர்.
கல்லூரிக்கு பரிசளித்த முன்னாள் கல்லூரி மாணவர்கள் மேளதாளங்கள் முழங்க, ஆடிப்பாடி வந்த மாணவர்கள் கடந்த கால நினைவுகளை மகிழ்ச்சியோடு நினைவு கூர்ந்தனர்.
இந்நிகழ்வின்போது, தாங்கள் படித்த கல்லூரிக்குப் பெருமை சேர்க்கும் விதமாக, சுமார் ரூ. 30 லட்சம் மதிப்பிலான மின் பரிசோதனை ஆய்வுக் கூடத்திற்கான கட்டடத்தை, கல்லூரிக்கு நன்கொடையாக வழங்கினர்.