தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதிமுகவுக்கு மூன்றாவது இடம்தான் : அமமுக வேட்பாளர் மாரியப்பன் கென்னடி சிறப்பு பேட்டி - mariyappan kennedy

சிவகங்கை: மானாமதுரை சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு மூன்றாவது இடமே கிடைக்கும் என்று அமமுக வேட்பாளர் மாரியப்பன் கென்னடி, ஈடிவி பாரத்துக்கு அளித்த சிறப்பு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அமமுக வேட்பாளர் மாரியப்பனம் கென்னடி

By

Published : Apr 16, 2019, 8:00 AM IST

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மாரியப்பன் கென்னடி நமது ஈடிவி பாரத்துக்கு சிறப்பு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு மக்கள் ஆதரவு அளிக்கிறார்கள். எடப்பாடி பழனிச்சாமி செய்த துரோகத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. கண்டிப்பாக அமமுக வேட்பாளரைத்தான் மக்கள் வெற்றிபெறுவார்கள்.

இளையான்குடி பகுதியில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம்தான் மிகப் பெரிய சவாலாக இருக்கிறது. இதுகுறித்து நான் ஏற்கனவே சட்டப்பேரவையில் பேசியிருக்கிறேன். அதனை வலியுறுத்தித்தான் வாக்கு சேகரித்து வருகிறேன். இத்திட்டத்தைச் செயல்படுத்தினாலே போதும் மக்கள் மகிழ்ச்சி அடைந்துவிடுவார்கள்.

அமமுக வேட்பாளர் மாரியப்பன் கென்னடி ஈடிவி பாரத்க்கு சிறப்பு பேட்டி

மேலும், பரிசு பெட்டகம் சின்னத்தை மக்களிடம் பெருவாரியாக கொண்டு சேர்த்துவிட்டோம். தொண்டர்கள் அதிகம் உள்ள கட்சி சின்னம் குறித்து பயப்படத் தேவையில்லை. ஒன்றரை கோடி தொண்டர்களை உருவாக்கி உள்ளோம். இதுமிகப் பெரிய வரலாற்றுச் சாதனை.

மானாமதுரை இடைத்தேர்தலில் உறுதியாக வெற்றி பெறுவோம். இரண்டாவது திமுக, மூன்றாவதாக எடப்பாடி பழனிச்சாமி அதனை நாங்கள் அதிமுக என்று சொல்வது கிடையாது. அதனை விரைவில் கைப்பற்றி விடுவோம் என்று தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details