சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே, செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் 46ஆவது தேசிய மகளிருக்கான சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டி, கடந்த 19ஆம் தேதி தொடங்கி இன்று இறுதிப் போட்டியுடன் முடிவடைந்தது. சுவிஸ் லீக் முறையில் நடைபெற்ற சதுரங்க போட்டியில்,106 மாணவிகள் பங்கேற்றனர்.
46ஆவது தேசிய மகளிர் சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டி - ஏர் இந்திய அணி சாம்பியன்! - championship
சிவகங்கை: காரைக்குடி தனியார் பள்ளியில் நடைபெற்ற தேசிய மகளிர் சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில் ஏர் இந்தியா அணி சாம்பியன் பட்டம் வென்றது.
46th National Women's Chess Championship - Air India Team Champion
இதில் ஏர் இந்தியா அணிக்காக விளையாடிய குல்கர்னி பாக்தி வெற்றிபெற்று முதல் பரிசான ரூ 4 லட்சத்தை வென்றார். இரண்டாம் பரிசு தொகையான 3 லட்சத்தை டெல்லியைச் சேர்ந்த வண்டிகா அகர்வாலும், மூன்றாம் பரிசை 2 லட்சத்தை மகாராஷ்ரா மாநிலத்தைச் சேர்ந்த திவ்யா தேஷ்முக்கும் பெற்றனர்.
வெற்றிபெற்ற மாணவிகளுக்கு கோப்பைகளை சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் வழங்கினார்.