தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு; 3 பேர் கைது, ஒருவருக்கு வலைவீச்சு! - சிவகங்கை அண்மைச் செய்திகள்

பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் அழகு நிலையத்தைச் சேர்ந்தவர்கள் உள்பட 3 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். தலைமறைவான ஒருவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு; 3 பேர் கைது, ஒருவருக்கு வலைவீச்சு!
பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு; 3 பேர் கைது, ஒருவருக்கு வலைவீச்சு!

By

Published : Nov 16, 2021, 6:47 PM IST

சிவகங்கை: காரைக்குடியில் உள்ள அழகு நிலையத்திற்கு தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், தனது சகதோழி அறிமுகத்தின் பேரில் சென்றுள்ளார். அப்போது அழகு நிலைய பொறுப்பாளருடன் மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

அப்போது அழகு நிலைய பொறுப்பாளர் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. பின்னர் இதுகுறித்து மாணவியின் பெற்றோர் காரைக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.

இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மேற்கு வங்கம் டார்ஜிலிங்கைச் சேர்ந்த மன்ஸில்(32), அவருக்கு உடந்தையாக இருந்த விக்னேஷ், காரைக்குடி மகளிர் அழகு நிலைய பொறுப்பாளர் லட்சுமி மற்றும் 16 வயது சிறுமி ஆகிய நான்கு பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர்.

இது தொடர்பாக மூவரைக் கைது செய்த காவல்துறையினர், தலைமறைவான மன்சிலை தீவிரமாக தேடிவருகின்றனர். காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க:பேய் பயம்: ஆயுதப்படை காவலர் தூக்கிட்டு தற்கொலை!

ABOUT THE AUTHOR

...view details