தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காதலித்த பெண் திருமணமாகி கர்ப்பமாக இருப்பதாகக் கூறியதால்.. இளைஞர் தற்கொலை! - இளைஞர் தற்கொலை

Youth suicide: சேலத்தைச் சேர்ந்த இளைஞர் தான் காதலித்த பெண் தற்போது திருமணம் ஆகி கர்ப்பமாக இருக்கிறேன் என்று கூறியதால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Youth commits suicide in Salem over love issue
சேலத்தில் காதல் விவகாரத்தில் இளைஞர் தற்கொலை

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 14, 2023, 5:36 PM IST

சேலம்:சேலம் மாநகர் மாமாங்கம் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் (24). இவர் சேலத்தில் உள்ள ஐஸ்கிரீம் கடை ஒன்றில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் ஸ்ரீதர் அதே பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். இதற்காக ஸ்ரீதர் மதம் மாறியதாகவும் கூறப்படுகிறது. இதனால் அவரின் வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ஆனால் காதலியுடன் வாழ்வதையே விரும்பிய ஸ்ரீதர் தொடர்ந்து அந்த பெண்ணுடன் தொடர்பிலிருந்து வந்துள்ளார்.

இதனை அறிந்த அந்தப் பெண்ணின் பெற்றோர் அவர்கள் குடியிருக்கும் இடத்தை, அவர்களின் சொந்த மாவட்டமான தருமபுரி மாவட்டத்திற்கு மாற்றியுள்ளனர். மேலும், அந்த இளம்பெண்ணை ஸ்ரீதர் உடன் பேசாமல் தடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து காதலி எங்குச் சென்றார் என்பதைத் தெரியாத ஸ்ரீதர் அவரை தேடி அலைந்து உள்ளார். இதற்கு இடையில் காதலியின் செல்போன் எண் ஸ்ரீதருக்கு கிடைத்துள்ளது.

அதனையடுத்து, காதலியைத் தொடர்பு கொண்டு ஸ்ரீதர் பேசியுள்ளார். அப்போது அவரின் காதலி தனக்குத் திருமணம் ஆகிவிட்டதாகவும், தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் மனம் உடைந்த ஸ்ரீதர் வீட்டில் தனியாக இருந்த போது தற்கொலை செய்துள்ளார்.

தற்கொலை எண்ணத்தை கைவிடுக

ஸ்ரீதரின் குடும்பத்தினர் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு ஸ்ரீதர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து தகவல் இருந்த சூரமங்கலம் போலீசார் ஸ்ரீதர் உடலை மீட்டு உடற்கூராய்விற்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: ஒரே மாதத்தில் 84 சவரன் நகைகளை கொள்ளை.. எல்லைப் பகுதியில் ஆட்டம் காட்டிய ஆந்திர நபர் கைது!

ABOUT THE AUTHOR

...view details