சேலம்: குமாரசாமிப்பட்டி பகுதியில் அதிமுக பிரமுகர் நடேசன் என்பவருக்குச் சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்தக் குடியிருப்பில் தங்கியுள்ள பிரதாப் என்பவர் சென்னையில் உள்ள நிதி நிறுவனத்தில் வேலை செய்துவருகிறார்.
இந்த நிலையில் பிரதாப் அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையாளர் நடேசனுக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு, தனது வீட்டில் யாரும் தொலைபேசி அழைப்பை எடுக்கவில்லை எனவும் வீட்டில் யார் இருக்கிறார்கள் என்று பார்க்கவும் என்று கேட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து குடியிருப்பின் உரிமையாளர் நடேசன், அவரது வீட்டின் அருகே சென்று பார்த்தபோது துர்நாற்றம் வீசியது.
இதனையடுத்து நடேசன் அஸ்தம்பட்டி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் காவல் ஆய்வாளர் மகேஸ்வரி தலைமையிலான காவலர்கள் வீட்டை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது நடத்திய சோதனையில் சூட்கேசில், கை கால்கள் கட்டப்பட்டு அழுகிய நிலையில் பெண் சடலம் கிடந்தது.