தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குப்பைக் கிடங்காக மாறிய ஏற்காடு வட்டார வள சேவை மைய கட்டடம் : மக்கள் கவலை !

சேலம் : போதிய பராமரிப்பு இல்லாததால் குப்பை கிடங்காக மாறியிருக்கும் ஏற்காடு வட்டார வள சேவை மைய கட்டடத்தை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர் .

பராமறிப்பு இல்லாததால் குப்பை கிடங்காக மாறியது ஏற்காடு வட்டார வள சேவை அலுவலகம்

By

Published : Aug 29, 2019, 8:03 PM IST

Updated : Aug 30, 2019, 9:26 AM IST

புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான ஏற்காட்டில் கடந்த 2013-2014 ஆம் ஆண்டில் ரூபாய் 40 லட்சம் செலவில் புதியதாக கட்டப்பட்ட வட்டார வள சேவை மையம் தற்பொழுது குப்பை கிடங்காகவும், மாட்டு தொழுவமாகவும் மாறியுள்ளது என ஏற்காடு மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். ஏற்காடு ஒன்றியத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள் செயற்பட்டுவருகின்றன. மேலும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்தவண்ணம் உள்ளனர்.

பராமறிப்பு இல்லாததால்குப்பை கிடங்காக மாறியது ஏற்காடு வட்டார வள சேவை அலுவலகம்

இந்நிலையில் ஏற்காட்டில் இருக்கும் குப்பைகள் அனைத்தும் ஏற்காடு ஊராட்சி ஒன்றிய அலுவலக சேவை மைய கட்டடம் அருகே மலைபோல் கொட்டப்படுகிறது. இதனால் அந்த பகுதியே குப்பைக் கிடங்காக மாற்றப்பட்டு துர்நாற்றம் வீசுகிறது.

கடந்த 6 ஆண்டுகளாக இந்த அலுவலகம் எந்த செயற்பாடுமின்றி பூட்டி வைக்கப்பட்டுள்ளதால்தான் இந்த நிலை வந்துள்ளதாக ஏற்காடுவாசிகள் தெரிவித்துள்ளனர். எனவே இதற்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Last Updated : Aug 30, 2019, 9:26 AM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details