தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாக்களிக்க மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள்! - 100% வாக்களிப்போம்

சேலம்: சேலம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க சிறப்பு சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்பட்டு அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் ரோகினி தெரிவித்துள்ளார்.

சர்க்கர நாற்காலிகள்

By

Published : Apr 11, 2019, 8:54 PM IST

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் 100% வாக்களிக்கும் வகையில் அவர்களுக்கு சிறப்பு சர்க்கர நாற்காலிகள் வழங்கப்பட்டுள்ளன. சேலம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க சிறப்பு சர்க்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்பட்டு அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பின்னர் மாற்றுத்திறனாளிகள், மாவட்ட ஆட்சியர் ரோகினி தலைமையில் '100% வாக்களிப்போம்' என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். நாற்காலிகளை வழங்கிய பின்னர், மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ரோகினி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, மாற்றுத்திறனாளிகள் 100 சதவிகிதம் வாக்களிக்கவேண்டும் அதற்கென இந்த சக்கர நாற்காலிகள் வழங்கப்படுகின்றன என்று குறிப்பிட்டார் .

சக்கர நாற்காலி

சேலம் மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா நடக்கிறதா என்பது குறித்து கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கென பறக்கும் படை அதிகாரிகளும், நிலைக்குழு அதிகாரிகளும் ஆங்காங்கே திருமண மண்டபங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் பல விழாக்களை கண்காணித்து வருகிறார்கள்.

மேலும், தேர்தல் அமைதியாக நடத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சமூகவிரோதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொது மக்கள் அமைதியாக அச்சமின்றி தங்கள் வாக்குகளைப் பதிவு செய்ய ஏற்பாடுகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details