தமிழ்நாட்டில் ஊழலை ஒழிக்க லோக் ஆயுக்தாவை நடைமுறைப்படுத்தாத முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவரின் சொந்த தொகுதியான எடப்பாடி சட்டப்பேரவைத் தொகுதியிலேயே தோற்கடிப்போம் என்று ஆம் ஆத்மி கட்சியின் தமிழ்நாடு தலைமை ஒருங்கிணைப்பாளர் வசீகரன் சேலத்தில் தெரிவித்தார்.
ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் துடைப்பம் யாத்திரை துடைப்பம் யாத்திரை
ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் துடைப்பம் யாத்திரை தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றுவருகிறது. கன்னியாகுமரியிலிருந்து துடைப்பம் யாத்திரை குழுவினர் நேற்று (டிசம்பர் 20) சேலம் குரங்குச்சாவடி பகுதிக்கு வந்தனர். அப்போது பொதுமக்கள் மத்தியில் அக்கட்சியின் தமிழ்நாடு தலைமை ஒருங்கிணைப்பாளர் வசீகரன் உரையாற்றினார்.
ஆம் ஆத்மி கட்சியின் தமிழக ஒருங்கிணைப்பாளர் வசீகரன் பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த வசீகரன் கூறுகையில், "எடப்பாடி சட்டப்பேரவைத் தொகுதிக்கு ஆம் ஆத்மி கட்சி சார்பில் இன்று சென்றிருந்தோம். அங்கு பொதுமக்கள் முதலமைச்சர் மீது அதிருப்தியில் உள்ளதை அறிந்தோம். நிச்சயமாக இந்த முறை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவரது தொகுதியிலேயே தோல்வியடைவார்.
ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் லோக் ஆயுக்தாவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடைமுறைப்படுத்தவில்லை. அதனால் அவரைத் தோற்கடிப்போம் என்று சூளுரைத்துள்ளோம்.
ஆம் ஆத்மி கட்சியின் தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் வசீகரன் செய்தியாளர் சந்திப்பு கரோனா காலத்தில் நிவாரண உதவிகளை வழங்காமல் சட்டப்பேரவைத் தேர்தலை மனத்தில் வைத்து தற்போது அரிசி ரேஷன் அட்டைகளுக்கு 2500 ரூபாய் வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்திருக்கிறார் .
இந்த அறிவிப்பு தேர்தலை ஒட்டியதுதான் என்று அனைவருக்கும் தெரியும். ஆம் ஆத்மி கட்சி சார்பில் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் ஊழலை ஒழிக்க யாத்திரைகள் நடத்தப்படும்" என்றார்.
இதையும் படிங்க: "இஸ்லாமியர்களின் சிறுபான்மையினர் அந்தஸ்தை ரத்து செய்ய வேண்டும்" - பாஜக எம்பி சர்ச்சைக் கருத்து